கோவில்களில் இந்துக்களின் மத வழிபாட்டு முறையை ஏற்று கொண்டு, வழிபாடு மேற்கொள்ள வரும் பிற மதத்தினரையும் அனுமதிக்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
அறநிலையத்துறை கண்காணிப்பில் ஆலயங்களை காப்போம் மற்றும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஆகிய தலைப்புகளில், மதுரையில் சிறப்பு மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவில்களில் இந்துக்களின் மத வழிபாட்டு முறையை ஏற்று கொண்டு, வழிபாடு மேற்கொள்ள வரும் பிற மதத்தினரையும் அனுமதிக்கலாம் எனவும், அதே நேரத்தில் கோவில்கள் இந்துக்களின் அடையாளம், அதை ஏற்று கொண்டு வருபவர்களுக்கு தடை எதுவும் இல்லை எனவும் கூறினார்.