சாதனை மாணவர்களுக்கு பரிசு! முகநூல் நண்பர்கள் அசத்தல் !!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மடத்துபட்டி பகுதியில் உள்ள அருகாமைப்பள்ளி அமைப்பும், சிவகாசி முகநூல் நண்பர்கள் குழு அமைப்பும் இணைந்து, நாட்டின் 75வது சுதந்திர அமுதப் பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் படிப்பு, விளையாட்டு, தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி பதக்கங்கள், பரிசுகள் வழங்கப்பட்டது.

க.மடத்துப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியை ஜெயமேரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, சிவகாசி சார் ஆட்சியர் பிரிதிவிராஜ், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மடத்துப்பட்டி ஆரம்பப்பள்ளியின் 3ம் வகுப்பு மாணவி ரக்சிதா, சுதந்திரப் போராட்ட வீரர்கள் 150 பேர்களின் பெயர்களை அச்சுப்பிசகாமல் கூறி அசத்தினார். இந்த சாதனையை செய்த மாணவி ரக்சிதாவிற்கு டிரம்ப் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்ததுடன் அதற்கான உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

- Advertisement - WhatsApp

மேலும் தாயில்பட்டி, மடத்துப்பட்டி, நதிக்குடி பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளி மாணவிகள் 75 பேர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட 75 தலைவர்களின் வேடங்கள் அணிந்து வந்து சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்து பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சிகளை சிவகாசி முகநூல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் சிவகாசி எம்எல்ஏ அசோகன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் சூரியா, சேவுகன், மாமன்ற உறுப்பினர் ராஜேஷ், தாசில்தார் லோகநாதன், வருவாய் ஆய்வாளர் விக்னேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை ஜெயமேரி நன்றி கூறினார்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...