சுதந்திர போராட்ட தியாகி வ உ சிதம்பரம் பிள்ளை 151 வது பிறந்த நாளை முன்னிட்டு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள அவரின் திரு உருவ.சிலைக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தெற்கு ஒன்றிய செயலாளர்கொரியர் கணேசன் தலைமையில் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர். இதில், சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் உள்பட நிர்வாகிகள் தொண்டர்கள். சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் வாடிப்பட்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் வார்டு செயலாளர் கலந்து கொண்டனர்.
