திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடற்கரையில், வழக்கத்தை விட 100 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடற்கரையில் அமைந்துள்ளதால், இந்த கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள், கடலில் நீராடிய பின்னரே கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அங்கு கடல் வழக்கத்தை விட 100 அடி தூரம் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடலுக்குள் இருக்கக்கூடிய பாறைகள் அனைத்தும் வெளியில் தெரிய ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அதிசயத்துடன் கண்டு, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.