குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறாக செய்தி வெளியிட்ட பாஜக பிரமுகர் சுரேஷ் என்பவரை கைது செய்யக்கோரி குன்றத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பாஜக பிரமுகர் சுரேஷ் என்பவர் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டு இருந்தார். இதை கண்டித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், பாஜக பிரமுகர் சுரேஷை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் வர்த்தக அணி சார்பில் குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட வர்த்தக தூறை தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்துகொண்டு பாஜக பிரமுகர் சுரேஷை கைது செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.