தொடர்ந்து பெய்து வந்த மழையால், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மகிழ்ச்சி அடைந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கால தாமதமாக தொடங்கிய நிலையில், கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
இந்த மழையால், தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து செல்கின்றனர்.
இதனை தொடர்ந்து, தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.