விளையாட்டு வீரர்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டறிய ஆடுகளம்
உதவி மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி
மூலம் கேட்டறிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கான
இணையதளப் பதிவையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
கபடி, சிலம்பம் ஆகிய பாரம்பரிய போட்டிகளுக்கு சிறப்பு கவனம்
வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் பேசினார். உலகளவில் விளையாட்டில் தமிழக வீரர்கள் பங்கேற்று சாதனை புரிய
வேண்டும் என்பதால் இதுபோன்ற விழா நடக்கிறது: முதல்வர்.
செஸ் ஒலிம்பியாட் மூலம் கிராமம் முதல் நகரம் வரை விளையாட்டுப்
போட்டிகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது: முதலமைச்சர்.
அக்டோபரில் மாவட்ட அளவிலும், ஜனவரியில் மாநில அளவிலும்
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெறும்: முதல்வர்.
