எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதன் மூலம், வரும் மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடிக்கு சவால் விட முடியும் என, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.
பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், பாஜகவுக்கு எதிரான கூட்டணியின் தலைவர் யார் என்பது சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் வரிசையில் காங்கிரஸ் கட்சிக்கு தனித்துவமான நிலை உள்ளது என்றாலும், தற்போது அதைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த ப.சிதம்பரம் எதிர்க்கட்சிகள் பாஜகவை எதிர்ப்பதில் ஒன்றுபட்டிருப்பதன் மூலம், நிச்சயமாக மோடிக்கு சவால் விட முடியும் என கூறினார்.