
திருமங்கலம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, திருமங்கலம் பிரதான கால்வாய் அணைப்பட்டி பேரணையில் இருந்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசனம் பெறும் பகுதிகளுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில், தலைமைப் பொறியாளர் ஞான சேகரன், செயற்பொறியாளர் , அன்பு செல்வன், துணை செயற்பொறியாளர் அன்பு தலைமையில் வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் பாசன கோட்ட தலைவர்கள் எம்.பி. ராமன் , தங்கராஜ், பகவான்,தியாக ராஜன்,பாண்டியன் மற்றும் விவசாய பிரதிநிதிகள் முன்னிலையில் உதவி பொறியாளர்கள் செல்லையா கோவிந்த ராஜன் பிரபாகரன் தளபதி ராம்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
*விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, உரிய காலத்தில் தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொண்ட பாசன கால்வாய் சங்கத் தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு, பெரியாறு வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் விவசாய சங்க கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.