திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியைக் கண்ட திரளான பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணையும் தாண்டி ஒலித்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி மாத பௌர்ணமியையட்டி மலையப்ப தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்திற்கு மத்தியில் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
108 வைஷ்ணவ திவ்யதேசங்களிலும் கருடசேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான பௌர்ணமி அன்று மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது வழக்கம்.
அதன்படி நடைபெற்ற இந்த வாகன கருட சேவை சுவாமி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திபரவசத்துடன் விண்ணதிர எழுப்பிய கோவிந்தா கோஷம் மெய்சிலிர்க்க வைத்தது.