வாசகர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள்!
உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.
இத்தகைய நன்நாளில் நமது ’உதயா டுடே’ இணையதளம் மீண்டும் புதுப்பொலிவுடன் தன் பயணத்தை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, இந்தியா, உலகம், அரசியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வெறும் செய்தியாக மட்டுமல்லாமல், புதிய கோணத்தில் உங்களுக்கு தர இருக்கிறோம்.
உதயா டுடே இணையதளம் தொடங்கிய நாளிலேயே பல்வேறு முன்னணி தொலைக்காட்சிகள் சற்று மிரட்சி அடைந்தார்கள் என்பது தெரியும். ஆனால், அவர்கள் வெளிகாட்டுக் கொள்ளவில்லை. அது வாசகர்களான உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், வரும் காலத்தில் உதயா டுடே வளர்ச்சியை பார்த்து, அவர்களின் மிரட்சியை மேலும் அதிகப்படுத்தும் என்பது திண்ணம்.