வைகை ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி அளவு தண்ணீர் வருவதற்கு வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் கூடுதல் கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இருந்திட கேட்டுக்
கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் வைகை ஆற்றில் இறங்குவதை முற்றிலும் தவிர்த்திடவும், ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வைகை ஆற்றில் இறங்காமல் பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
என, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தகவல் தெரிவித்துள்ளார்.