இந்தியாவையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
288 பேரை பலி கொண்ட ஒடிசா மாநிலம் பாலசூரில் நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள விஜய் வசந்த் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், யஸ்வந்த்பூர் ஹவுரா அதிவிரைவு ரயிலும் விபத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்த செய்தியறிந்து அதிர்ச்சிக்குள்ளானேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் நலமடைய வேண்டுகிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.