மதுரை அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க கருத்தரங்கம் நடைபெற்றது.
இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அகத்தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த, துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் மற்றும் முதன்மை மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் சஞ்சீவி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக காந்திகிராம பல்கலைக்கழகத்தின் வேதியல் துறை பேராசிரியர் முனைவர் சேதுராமன் தேசிய கல்விக் கொள்கையின் அமலாக்க சவால்கள் குறித்து உரையாற்றினார். கருத்தரங்கின் போது , ஆசிரியர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர். இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் மீனாட்சிசுந்தரம் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை வேதியல் துறை பேராசிரியர் முனைவர் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார்.