கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இருளர் பழங்குடியினர் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, கிரீடம் சூட்டி ஊர்வலமாக அழைத்து சென்று பேரூராட்சி நிர்வாகம் பள்ளியில் சேர்த்தது.
சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர். பகுதியில் ஊராட்சி ஒன்றிய இருளர் பழங்குடியினர் பள்ளி உள்ளது. கல்வி குறித்த விழிப்புணர்வு இருளர் இன மக்களுக்கு இல்லாததால், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு தகுதி உடைய மாணவர்களை, கிள்ளை பேரூராட்சி துணை தலைவர் ரவீந்திரன், பள்ளியில் சேர்த்தார். மாணவர்களுக்கு, மாலை அணிவித்தும், மலர் கிரீடம் சூட்டியும் வாகனத்தில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
கல்வியின் விழிப்புணர்வு குறித்து ஒலிபெருக்கியில் விளக்கும் வகையில், மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.